கொய்யாப்பழம் திருடிய 6 வயது சிறுமி : கைது செய்ய வற்புறுத்திய தாத்தா-பாட்டி!!

786

goa

வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கொய்யாப்பழங்களைத் திருடிய குற்றத்திற்காக 6 வயது சிறுமியைக் கைது செய்யச் சொல்லி வற்புறுத்திய வயதான தம்பதிகளால் ராஜஸ்தான் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் கோத்ரா மாவட்டத்தில் உள்ள பிரகதி நகரில் வாழ்ந்து வரும் வயதான தம்பதிகள் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர். சமீப காலமாக அவர்களது தோட்டத்தில் உள்ள மரங்களில் இருந்து கொய்யாப் பழங்கள் மாயமாகி வந்தன.

திருடனைக் கையும், களவுமாக பிடிக்க நாள் பார்த்து வந்தனர். ஒருநாள் 6 வயது சிறுமி ஒருவர் சுவர் ஏறிக் குதித்து தோட்டத்திற்குள் புகுந்ததைக் கண்டனர் அவர்கள். உடனடியாக ஓடிச் சென்று அச்சிறுமியைக் கையும் களவுமாக கொய்யாப் பழக்களோடு பிடித்து விட்டனர்.

உடனடியாக அச்சிறுமியின் வீட்டைச் சோதனையிட்ட அவர்கள் அங்கிருந்து மற்றொரு கொய்யாவைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர், அச்சிறுமியை பொலிஸ் நிலையத்திற்குஅழைத்துச் சென்று பொலிசார் அவள் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி வற்புறுத்தினர்.

7 வயதுக்கு குறைவான குழந்தைகளை கைது செய்ய இயலாது என எவ்வளவோ பொலிசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்க மறுத்து பிடிவாதம் பிடித்துள்ளனர் அத்தம்பதி. பின்னர் ஒருவழியாக அச் சிருமியை அவர்களிடமிருந்து காப்பாற்றி அவளது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர் பொலிசார்.

சிறுமியை அவளது முடியைப் பிடித்து பொலிஸ் நிலையம் வரை இழுத்து வந்த அத்தம்பதியரின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். கொய்யாவிற்கு கொடுத்த மதிப்பைக் கூட 6 வயது சிறுமிக்குத் தரவில்லையே என அச்சிறுமியின் பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.