வவுனியாவில் மாணவர்களிடையே மோதல் ஒருவர் காயம்..!!

416


schoolவவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மோதி கொண்டதால் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார் . இச் சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம் பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது கடந்த திங்கட்கிழமை மாலை கலை, வர்த்தக பிரிவு மாணவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட வாய் தகராறு பின்னர் கை கலப்பாக மாறியுள்ளது.இதில் கலை பிரிவை சேர்ந்த மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு எட்டு தையல் போடப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் யாழ் பல்கலைகழக வவுனியா வளாக மாணவர்களுக்கிடையே இடம் பெற்ற கைகலப்பில் நான்கு மாணவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.