
அமெரிக்காவில் கொரில்லாவை அடைத்து வைத்திருந்த கூண்டுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக 17 வயதான கொரில்லாவை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.ஒஹியோ மாநிலம், சின்சினாட்டி பகுதியில் உள்ள வனவிலங்குப் பூங்காவில் கொரில்லாக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையிலான பகுதி உள்ளது.
இங்கு கொரில்லாவை அடைத்து வைத்திருக்கும் 1 0 முதல் 12 அடி உள்ள குழிக்குள் 3 வயது குழந்தை தவறி விழுந்துள்ளது.இந்த கூண்டுக்குள் 3 கொரில்லாக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன, மற்ற இரு கொரில்லாக்கள் தூரத்தில் இருக்கவே ஒரு கொரில்லா மட்டும் குழந்தையின் அருகில் நின்றுள்ளது.
இதனைப்பார்த்த பலரும் அச்சத்தில் கத்தியுள்ளனர், மேலும் குழந்தையை மீட்பதற்காக பொலிசார் 10 நிமிடம் முயற்சி செய்தனர், ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை.இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என கருதிய பாதுகாவலர்கள் கொரில்லாவை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் கொரில்லா உயிரிழந்துள்ளது, பிறகு குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குழந்தையை மீட்க கொரில்லாவுக்கு மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தியிருக்கலாம் என அமெரிக்காவில் கண்டனமும் எழுந்திருக்கிறது.





