கோயில்களில் மிருக பலியிடலை தடுக்க அமைச்சரவை பத்திரம்!!

882

download
கோயில்களில் மேற்கொள்ளப்படும் மிருகப் பலியிடலை தடுக்கும் வகையில்அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.இந்து கலாசார திணைக்களம் இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.இதன்கீழ் தற்போது வரைபு தயாரிக்கப்பட்டு அரச சட்டவரைஞர் திணைக்களத்தின் அனுமதியும்பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், புத்தளம் ஆகிய இடங்களில் இந்த மிருகப் பலியிடல் நடவடிக்கைகள்பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மலையகத்திலும் குறிப்பிடத்தக்க அளவான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.இந்தநிலையில் இதனை கட்டுப்படுத்த முன்னர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும்எதிர்ப்புக்கள் காரணமாக அவை விடப்பட்டன.எனினும் இந்து மதக் கோட்பாடுகளில் இந்த விடயத்துக்கு இடமில்லை என்ற வகையில்பலியிடலை தடுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக திணைக்களம்குறிப்பிட்டுள்ளது.