
மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றி வரும் அர்ஜூன் மகேந்திரனை மீளவும் அந்தப் பதவிக்காக நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூட்டு எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடிதம் ஒன்றின் ஊடாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தினேஸ் குணவர்தன, திஸ்ஸ விதாரண, மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் டியு.குணசேகர ஆகியோர் இந்த கோரிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் மற்றும் விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ள மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை மீளவும் அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய வங்கி ஆளுனரின் பதவிக் காலம் விரைவில் பூர்த்தியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு குறைபாடுகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன.அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலம் முடிவடையும் காரணத்தினால் வேறும் பொருத்தமான ஒருவரை பதவிக்கு நியமிக்குமாறு கோருவதாக கூட்டு எதிர்க்கட்சியினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





