யாழ்.காரைநகர் சிவன்கோவில் பகுதியில் கடந்த 15ம் திகதி தன்பேரனால் தாக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிப மாது ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலு ம் தெரியவருவதாவது, சுப்பிரமணியம் சீதாலட்சுமி(வயது73) என்ற வயோதிப மாது கணவனை பிரிந்த தன் மகள் மற்றும் மகளின் இருபிள்ளைகள், மனைவியை பிரிந்த மகன் ஆகியோருடன் வாழ்ந்து வந்த நிலையில்,குறித்த வயோதிப மாதுவின் மகளுடைய மகன் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.
27 வயதான மேற்படி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் தினசரி வீட்டின்கதவை பூட்டி திறப்பை கையில் வைத்துக் கொண்டு தன்னுடைய அனுமதி இல்லாமல்யாரும் வீட்டுக்குள் போகக் கூடாது என வீட்டில் இருந்தவர்களை வற்புறுத்துவதைவழக்கமாக கொண்டிருந்துள்ளான்.இந்நிலையில் கடந்த 15ம் திகதி மேற்படி இளைஞனின்தாய் கூலி வேலைக்கு சென்றுவிட்டு மழை காரணமாக வீடு திரும்பாத நிலையில்மேற்படி வயோதிப மாது தன் பேரனை சோறு சாப்பிடுமாறு கேட்டிருக்கின்றார்.அதற்குபேரன் மறுத்த நிலையில் இல்லை கட்டாயம் சாப்பிடவேண்டும் என கேட்டவாறு மேற்படிவயோதிப மாது குசினிக்குள் சென்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன்(பேரன்)தனது அம்மம்மாவை மர சட்டத்தால் தாக்கி விட்டு வீட்டின் தாள் வாரத்தில் கொண்டுவந்து போட்டுள்ளான்.
இந்தச் சம்பவத்தின் போது குறித்த வயோதிப மாதுசத்தமிட்ட போதும் அயலவர்களோ வீட்டில் இருக்கிறவர்களோ வீட்டுக்கு வராத நிலையில்மறுநாள் 16ம் திகதி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனின் தாய் வந்து தனது தாயைகாப்பாற்ற முயன்று யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சைவழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின்திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்






