இளைஞரைக் கடித்தவுடன் உயிரிழக்கும் கொடிய வகையான பாம்புகள்: திருப்பத்தூரில் அதிசயம்!!

1319

snake-man
திருப்பத்தூரில் பாம்பு பிடித்து வரும் வாலிபரை கடிக்கும் கொடிய வகையான பாம்புகள் அதே இடத்தில் உயிரிழக்கும் சம்பவம் அதிசயத்தை எற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் அடுத்த அன்னாண்டபட்டியை சேர்ந்தவர் ராபர்ட்(24). இவர் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகளை லாவகமாக பிடிப்பதில் வல்லவராக உள்ளார். இதனால் இவர் ‘ஸ்நேக்’ ராபர்ட் எனஅழைக்கப்படுகிறார்.

இவர் பாம்புகளின் நடமாட்டத்தை தனது நுகரும் தன்மை மூலமே கண்டறிந்து கைகளாலேயே பிடித்து அசத்தி வருகிறார். இதில் பெரிய அதிசயம் என்னவென்றால், இவரை கடிக்கும் எந்த கொடிய வகையான பாம்பாக இருந்தாலும் உடனே இறந்து விடுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடிவிரியன், ராபர்ட்டை கடித்து விட்டது. இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விட்டு வந்த போது ராபர்ட்டை கடித்த பாம்பு அதே இடத்தில் இறந்து கிடந்தது.அதன் பின்அந்த அதிசயம் தொடர்வதால் அவருக்கு‘ஸ்நேக் ராபர்ட்’ என்ற பெயர் வந்தது என்கின்றனர். வனத்துறையினர் கூட தங்களால் பிடிக்க முடியாத பாம்புகளை ஸ்நேக் ராபர்ட் மிகவும் சாதாரணமாக பிடித்து விடுகிறார் என கூறியுள்ளனர்.