எக்ஸ்பிரஸ் ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வயது மூதாட்டி: ஜேர்மனியில் ஒரு அதிசய சம்பவம்!!

344

Railjet_bei_Guntramsdorf

ஜேர்மனி நாட்டில் 91 வயது மூதாட்டி ஒருவரின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் ஏறிச் சென்ற நிலையிலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு ஜேர்மனியில் உள்ள லோயர் லாக்ஸோனி நகருக்கு அருகில் உள்ள Langwedel என்ற பகுதியில் தான் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியில் உள்ள ரயில் பாதையை 91 வயதான மூதாட்டி ஒருவர் தினமும் கடந்து சென்று வீடு திரும்புவார்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூதாட்டி நடந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் ’வாக்கிங் ஸ்டிக்’ ஒன்றை ஊன்றிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.அப்போது, எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பாய்ந்து வந்துள்ளது.

தண்டவாளத்தின் மத்தியில் நின்றுக்கொண்டுருந்த மூதாட்டி ‘இனி தப்பிக்க முடியாது’ என தீர்மானித்து தனது கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கை அருகில் வீசிவிட்டு தண்டவாளத்தில் படுத்துள்ளார்.வேகமாக வந்த ரயில் அவர் உடல் மீது ஏறிச்சென்றுள்ளது. அப்போது, மூதாட்டி வீசிய வாக்கிங் ஸ்டிக் ரயில் சிக்கி இழுத்துக்கொண்டு சென்றுள்ளது.

’காட்டு விலங்கு மீது மோதி விட்டோம்’ என கருதிய ரயில் ஓட்டுனர் அடுத்ததாக வந்த Verden என்ற ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கி வந்து பார்த்துள்ளார்.அங்கு, மூதாட்டி பயன்படுத்திய வாக்கிங் ஸ்டிக் சிதைந்து இருந்ததை அண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

‘முதியவர் மீது ரயிலை ஏற்றிவிட்டோம்’ என அச்சம் அடைந்த ஓட்டுனரால் ரயிலை தொடர்ந்து ஓட்ட முடியவில்லை.இந்நிலையில், எதிர்புறமாக சென்ற ரயில் ஓட்டுனர் ஒருவர் தண்டவாளத்தின் மத்தியில் ஒரு மூதாட்டி படுத்திருப்பதை பார்த்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றபோது, மூதாட்டி கூலாக எழுந்து நின்றுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் பேசியபோது, ‘உண்மையில் மூதாட்டி மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனெனில், தண்டவாளத்தில் படுத்துள்ளபோது ரயில் ஏறிச்சென்றால், உடலில் உள்ள உடுப்புகள் ரயில் சிக்கி நபரை இழுத்துச்சென்று சிதைத்திருக்கும்.

ஆனால், மூதாட்டி தண்டவாளத்தின் மீது நேர்த்தியதாக படுத்திருந்ததால், அவரது உடல் உறுப்புகள் மற்றும் உடுப்புகள் எதுவும் ரயிலில் சிக்கவில்லை.எனினும், மூதாட்டிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுருந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஆரோக்கியமாக வீடு திரும்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.