இளைஞரை நடுவீதியில் வைத்து தாக்கிய சூர்யா மீது பரபரப்புப் புகார்!!

475

Surya

நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக வாலிபர் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.சென்னை பாரிமுனையை சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் அடையாறு திரு.வி.க. நகர் பாலம் அருகே பெண்ணின் கார் மீ்து பைக்கை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருந்த வேளை அந்த வழியாக வந்த நடிகர் சூர்யா அந்த வாலிபரை அடித்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து அந்த வாலிபர் நடிகர் சூர்யா தன்னை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியதாக சென்னை சாஸ்திரிநகர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.