கர்ப்பமான பெண்களின் பிரசவ திகதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது?

344


pregnant-woman-and-husband

கர்ப்­ப­மான பெண்கள் தமது பிர­ச­வங்­களைப் பற்றி, பிர­சவ முறைகளைப் பற்றி பல்­வேறு எதிர்­பார்ப்­புகள், விருப்பு,வெறுப்புக்கள் அபிப்­பி­ரா­யங்­களைக் கொண்­டி­ருப்­பார்கள். அதுவும் பிர­சவ திகதி நெருங்க, நெருங்க இது சுகப் பிர­ச­வ­மாக இருக்­குமா? அல்­லது சிசே­ரியன் பிர­ச­வ­மாக இருக்­குமா? என பெண்­களும் கண­வன்­மாரும் ஒரு ஏக்­கத்­துடன் இருப்­பார்கள்.



பெரும்­பா­லான தம்­ப­தி­யினர் இதனை எப்­ப­டி­யா­வது ஒரு சுகப் பிர­ச­வ­மாக நடத்­தி­விட வேண்டும் என்ற எதிர்­பார்ப்­புடன் இருப்­பார்கள். அவர்­க­ளது எதிர்­பார்ப்­பு­க­ளையும் கன­வு­க­ளையும் நிறை­வேற்­று­வதே மருத்­து­வத்­து­றையில் எமது கட­மை­யாகும்.

நடை­மு­றையில் சிசே­ரியன் பிர­சவம் மருத்­துவத் துறையைப் பொறுத்­த­வ­ரையில் இல­கு­வாக ஒரு குறு­கிய நேரத்தில் முடித்து­விடக் கூடி­ய­தாக இருப்­ப­தனால் மருத்­து­வர்­களைப் பொறுத்­த­வ­ரையில் சிசே­ரியன் பிர­சவம் சுல­ப­மான தீர்­வாக இருந்­தாலும் மக்கள் இதனை ஏற்றுக் கொள்­வார்­களா?.



பெண்கள் நீண்ட நேரம் பிர­சவ வலியை அனு­ப­வித்து பல மணி நேரங்­களின் பின் தமது குழந்தையைப் பெற்­றெ­டுக்கும் சாதா­ரண சுகப் பிர­ச­வத்­தையே தமக்­கு­ரிய தீர்­வாக எதிர்பார்ப்பார்கள். அது மட்­டு­மின்றி இதன்­போது தான் அவர்கள் முழு­மை­யாக திருப்தி அடைகிறார்கள். ஆகையால் நாம் முடிந்­த­வரை ஒத்­து­ழைப்பு வழங்கி அவர்­க­ளது எதிர்­பார்ப்­பு­க­ளுக்கும் விருப்­பு­க­ளுக்கும் ஏற்­ற­வாறு சுகப் பிர­ச­வத்தை நிறை­வேற்றிக் கொடுக்கும் போதே எமக்கும் ஒரு திருப்தி நிலை ஏற்­ப­டு­கின்­றது. எனவே, இன்­றைய கட்­டு­ரையில் சிசே­ரியன் பிர­ச­வங்­களை தவிர்க்கும் வழி­மு­றைகள் பற்றி ஆராய்­வ­தோடு சிசே­ரியன் பிர­ச­வங்­களை தவிர்க்க முடி­யாத சந்­தர்ப்­பங்­க­ளையும் அறிந்து கொள்வோம்.



பிர­சவத் திகதி எவ்­வாறு நிர்­ண­யிக்­கப்­ப­டு­கின்­றது?


கர்ப்பம் தரித்த பெண்­களில் இறு­தி­யாக மாத­விடாய் வந்த திக­தி­யி­லி­ருந்து 9 மாதங்­க­ளிலும் 7 நாட்­க­ளிலும் (40 வாரங்கள்) பிர­சவ திகதி தீர்­மா­னிக்­கப்­படும். சாதா­ரண பிர­ச­வ­மாக இருந்தால் பிர­சவ வலி இந்த 40 கிழ­மை­களின் முடிவில் ஒரு சில கிழ­மைகள் முன்­னரோ அல்­லது ஓரிரு வாரங்கள் பின்­னரோ ஆரம்­பிக்கும்.

40 வார கால முடிவில் வழங்­கப்­பட்ட எதிர்­பார்ப்புத் திக­தியில் பிர­சவ வலி வர­வில்­லை­யென சிசே­ரி­யனைப் பற்றி சிந்­திக்­காமல் நாம் மேலும் ஒரு வார காலம் அவ­காசம் கொடுத்து அதா­வது 41 வார காலம் வரை காத்­தி­ருக்கும் போது கூடு­த­லா­ன­வர்­களில் பிர­சவ வலி ஏற்­பட்டு சாதா­ரண பிர­சவம் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. மேலும் ஏதா­வது கார­ணங்­க­ளுக்­காக சிசே­ரியன் பிர­சவம் மேற்­கொள்ளத் தீர்­மா­னித்­தி­ருந்தால் 38 – 39 வாரங்கள் முடிந்த பின்னர் சிசே­ரியன் மேற்­கொள்ளும் போதே குழந்தை சிக்­கல்கள் எது­வு­மின்றி ஆரோக்­கி­ய­மா­ன­தாக இருக்கும். ஆனால் ஏதா­வது கார­ணங்­க­ளுக்­காக குறைந்த வாரங்­களில் சிசே­ரியன் மேற்­கொள்ளும் போது நாம் ஒரு விட­யத்தை சிந்­திக்க வேண்டும். அதா­வது பிர­ச­வத்தின் பின் குழந்­தையின் ஆரோக்­கி­யத்தில் குறைகள் இருந்து மேலும் சில நாட்கள் குழந்தை வைத்­திய நிபு­ணரின் கண்­கா­ணிப்பில் குழந்­தையை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ருப்­பது பெற்­றோ­ருக்கு வேத­னை­யான விட­யமே. எனவே பிர­சவ திக­திக்கு சற்று முந்­திய வாரங்­களில் சிசே­ரியன் என்று தீர்­மா­னிக்கும் போது ஒரு­மு­றைக்கு இரு­முறை சிந்­தித்து முடி­வுகள் எடுக்க வேண்­டி­யது அவ­சியம்.


தலை மேல் கால் கீழே­யுள்ள சிசுவின் (Breech) பிர­சவம் எவ்­வாறு அமையும்?

கர்ப்ப காலத்தில் சிசு கர்ப்ப பையினுள் இருக்கும் விதம் ஒரு முக்­கி­ய­மான விடயம். பெரும்­பா­லான சிசுக்கள் தலை கீழேயும் கால் மேலே­யு­மான நிலை­யி­லேயே கர்ப்பப் பையினுள் அமைந்­தி­ருக்கும். இவ்­வா­றான சிசுக்­களை வேறு மருத்­துவ சிக்­கல்கள் இல்­லா­த­வி­டத்து சாதா­ரண சுகப் பிர­ச­வத்தின் மூலம் பிர­ச­விப்­பது இல­கு­வா­னது. ஆனால் சிசுவின் தலை மேலேயும் கால் கீழேயும் உள்ள நிலையில் சாதா­ரண பிர­சவம் சிக்­க­லா­ன­தாக அமை­யு­மென்­ப­தனை நாம் அறிய வேண்டும். இதனால் இவற்றை சிசே­ரியன் மூலம் பிர­ச­விக்­கி­றார்கள். ஆனால் சில சந்­தர்ப்­பங்­களில் பிர­ச­வத்­திற்கு முன்­னரே இவ்­வ­கை­யான சிசுக்கள் கர்ப்பப் பையினுள் இருக்கும் விதத்தை கர்ப்­பிணி ஒரு­வரின் வயிற்றை வைத்­தியர் தனது கைகளால் அசைத்து தலை மேலே­யுள்ள சிசுவை திருப்பி தலை கீழே­யாக மாற்ற முடியும். அதன் பின்னர் இவர்­களை சாதா­ரண சுகப் பிர­ச­வத்­திற்கு அனு­ம­திக்க முடியும். இந்த முயற்சி பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு வெற்றி அளிக்­கின்­றது. இப்­ப­டி­யான முயற்­சிகள் மூலம் சிசேரியன் பிர­ச­வங்­களின் அளவு குறைக்­கப்­ப­டு­கின்­றது.

கர்ப்ப காலத்தின் இறுதிப் பகு­தியில் உயர்­கு­ரு­தி­ய­முக்கம் ஏற்­பட்டால் பிர­சவம் எவ்­வாறு அமையும்?

கர்ப்ப காலத்தின் இறுதிப் பகு­தியில் உயர் குரு­தி­ய­முக்கம் (High Blood Pressure) ஏற்­படும் போது ஒரு நிலையில் பிர­ச­வமே இதற்குத் தீர்­வாக அமை­கின்­றது. இந்தப் பிர­சவம் கட்­டாயம் சிசே­ரி­ய­னா­கத்தான் இருக்க வேண்­டு­மென்­ப­தல்ல. முதலில் நாம் அவர்­க­ளுக்கு சாதா­ரண பிர­ச­வத்தை முயற்­சிக்க வேண்டும். இது கூடு­த­லா­ன­வர்­க­ளுக்கு வெற்­றி­ய­ளிக்­கின்­றது. ஆனால் சாதா­ரண பிர­சவம் தோல்­வி­ய­டைந்தால் அல்­லது தாம­த­ம­டைந்தால் சிசே­ரியன் பிர­சவம் பற்றி சிந்­திக்­கலாம்.


கர்ப்ப காலத்தில் நீரி­ழிவு நோய் (Diabetes) ஏற்­படின் பிர­சவம் எவ்­வாறு அமையும்?

கர்ப்ப காலத்தில் நீரி­ழிவு நோய் ஏற்­ப­டும்­போது பிர­சவ திக­திக்கு ஒரு வாரத்­திற்கு முன் பிர­சவம் மேற்­கொள்ள வேண்டும். இதன் போது தான் சிசு­விற்கு இறுதி நேரத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய ஆரோக்­கிய குறை­களை தவிர்க்க முடியும். இதற்­காக நீரி­ழிவு நோயு­டைய பெண்­க­ளுக்கு பிர­சவம் கட்­டாயம் சிசே­ரி­ய­னா­கத்தான் இருக்க வேண்­டி­ய­தில்லை. சாதா­ரண சுகப் பிர­ச­வமும் முடியும். முதலில் சாதா­ரண சுகப் பிர­ச­வத்­திற்கு முயற்­சித்து இது வெற்­றி­ய­ளிக்­கா­விடில் சிசே­ரியன் மேற்­கொள்­ளலாம்.

ஒரு­முறை சிசே­ரியன் மேற்­கொள்­ளப்­பட்­ட­வ­ருக்கு அடுத்த பிர­சவம் எவ்­வாறு அமை­யலாம்?

ஒரு­முறை சிசே­ரியன் பிர­சவம் மேற்­கொள்­ளப்­பட்ட பெண் ஒருவர் அடுத்த முறை கர்ப்­பந்­த­ரிக்கும் போது இம்­மு­றையும் கட்­டாயம் சிசே­ரியன் பிர­ச­வ­மா­கத்தான் இருக்க வேண்டும் என்­றில்லை.

முதல் முறை என்ன கார­ணத்­திற்­காக சிசே­ரியன் மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பதை பொறுத்து அடுத்த பிர­ச­வத்தை தீர்­மா­னிக்­கலாம். அதா­வது தாயின் இடுப்பு சிறிது என்­ப­தற்­காக முதல் முறை சிசே­ரியன் பிர­சவம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தால் இம்­மு­றையும் சிசே­ரியன் தான் மேற்­கொள்ள வேண்டி வரும். வேறு கார­ணங்­க­ளுக்­காக கடந்த முறை சிசே­ரியன் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தால் இம்­முறை சாதா­ரண பிர­ச­வத்­திற்கும் வாய்ப்­புள்­ளது.

நீண்­ட­காலம் குழந்தைப் பாக்­கியம் தாம­த­ம­டைந்து கருத்­த­ரித்­த­வர்­க­ளுக்கு எவ்­வா­றான பிர­சவம் உகந்தது.

நீண்டகாலம் குழந்தைப் பாக்கியம் தாமதித்து கருத்தரித்தவர்களில் வேறு எந்தச் சிக்கலும் கர்ப்ப காலத்தில் இல்லாதவிடத்து சாதாரண பிரசவம் முடியும். ஆனால் பெண்கள் தமது தனிப்பட்ட விருப்பத்திற்கமைய சிசேரியனை தீர்மானித்தால் அதனை மேற்கொள்ள முடியும்.

எனவே பெண்களே! பிரசவ முறைகள் எவை? அவற்றில் உங்களுக்கு பொருத்தமான முறை என்ன? என்பவற்றை உங்களைப் பராமரிக்கும் வைத்திய நிபுணருடன் கலந்தாலோசித்து உங்கள் விருப்பு வெறுப்புகளை தெரிவித்து அவரிடமிருந்து தகுந்த விளக்கங்களைப் பெற்று தெரிவு செய்ய வேண்டும். இதன் போது தான் பிரசவத்தின் போது தாயின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் என்பன பேணப்படும்.