படப்பிடிப்பில் காயமடைந்த கமல்..!!

555

Kamal-Haasan

விஸ்வரூபம் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் கமல் சண்டைக் காட்சியில் நடித்தபோது காயம் அடைந்தார். தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

புதிய படமொன்றின் பாடல் பதிவுக்காக லண்டன் சென்றிருக்கும் இளையராஜா முதன்முறையாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் பங்கேற்க வேண்டும் என்று கமலிடம் கேட்டார்.

விஸ்வரூபம் 2 படப்பிடிப்பிலிருந்து வீடியோ கன்பரன்ஸ் மூலமாக இளையராஜாவுடன் பேசிய கமல், படப்பிடிப்பின் போது காயம் அடைந்திருந்தாலும் இளையராஜாவின் இசை எந்த காயத்தையும் ஆற்றிவிடும் என்பதால் காயத்தை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக பதில் அளித்தார்.