சட்டவிரோத ஆடை விற்பனை – இந்தியர்கள் இருவர் கைது!!

269

arrest (1)
சட்டவிரோதமான முறையில் ஆடை விற்பனையில் ஈடுப்பட்டு வந்த இரு இந்தியர்கள் உட்பட இலங்கைப் பெண் ஒருவரை கண்டி சுற்றுலாத் துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாரின் திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்களான இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த இந்தியர்கள், இலங்கை பெண் ஒருவரின் ஆதரவுடனேயே இவ்வாறு ஆடை விற்பனைகளில் ஈடுப்பட்டு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சந்தேகநபர்களான மூவரும் இன்று கண்டி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.