கடலில் சுறாமீன் கடித்ததில் கையை இழந்த பயணி..!

588

sharkஅமெரிக்காவின் ஹவாய் தீவில் மாயி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒயிட் ராக் கடற்பகுதியாகும். நேற்று இந்தப் பகுதியில் கடலில் மூழ்கி நீந்திக் கொண்டிருந்த ஜெர்மன் பயணி ஒருவரை சுறாமீன் தாக்கியதில் அவரது வலது கையை இழந்துள்ளார். விபத்து நடந்ததைக் கேள்விப்பட்டு அவசரகால உதவியாளர்கள் வந்தபோது அவர் மயக்க நிலையை அடைந்திருந்தார்.

கடலிலிருந்து அவரை மீட்ட உதவியாளர்கள் அவரை மாயியில் உள்ள மருத்துவ மையத்தில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து இரண்டு புறமும் ஒரு மைல் தூரத்திற்கு கடற்கரை மூடப்பட்டுள்ளது. இன்று அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆராய்ந்த பின்னரே கடற்கரையை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்வார்கள்.

இதே இடத்தில் கடந்த பிப்ரவரியில் ஒரே நாளில் இரண்டு பேரும், ஜூலை மாத இறுதியில் ஒருவரும் ஆக இதுவரை நான்கு பேர் சுறாமீனின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். சமீப காலங்களில் சுறா மீன்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆயினும், புளோரிடா பல்கலைக்கழக கணக்கீடுகளின்படி, இதனால் ஏற்படும் இறப்பு சதவிகிதம் இரண்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.