
அனுமதியின்றி எவரேனும் யானைகளை வைத்திருப்பார் எனின் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு வலுவாதார அபிவிருத்திகள் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு யானைகளை வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.பொது மக்கள் தமது தகவல்களை தமது அமைச்சுக்கோ அல்லது இரகசிய பொலிஸாருக்கோ அல்லது சட்டத்தரணிக்கோ அறிவிக்க முடியும் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது வன ஜீவராசிகள் பொறுப்பில் உள்ள யானைகள் ஒரு போதும் விடுவிக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் விஹாரை உற்சவங்களுக்கும் யானைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





