கொழும்பில் 2500 டொன் குப்பைகள்!!

417

c0c573e5dc7131bbef234c1db8be04d8_XL
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 2500 டொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள் கொலன்னாவ குப்பை பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

500க்கும் அதிகமான உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரிகளுடன் இணைந்து, இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் குப்பைகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.கொலன்னாவ, மீதொட்டமுல்லை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, அங்கொடை, கொத்தட்டுவ, சேதவத்தை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.