
தனது 93வது பிறந்தநாளை குடும்பத்தார் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் கருணாநிதி.திமுக தலைவர் கருணாநிதி, தனது பிறந்தநாளை முன்னிட்டு சி.ஜ.டி காலணியில் உள்ள அவரது வீட்டில் அதிகாலையில் அரச மரக்கன்றை நட்டார்.
அப்போது திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பொருளாளர் ஸ்டாலின் தனது மனைவியுடன் கருணாநிதி வீட்டிற்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.மேலும் தொண்டர் ஒருவர் கருணாநிதியின் 93வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 93 அடி நீளத்தில், 93 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட பண மாலையை அணிவித்துள்ளார்.





