கட்டாரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் தீ அனர்த்தம்- 11 பேர் பலி!!

521

fire-al-saliyah-QATAR1

கட்டாரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 11 பேர் பலியானதுடன் 12 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.அபு சம்ரா பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இந்தத் தீ அனர்த்தம் குறித்து நேற்று வெள்ளிக்கிழமை சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

சல்வா சுற்றுலா திட்டத்திற்காக பணியாற்றும் கம்பனிக்கு சொந்தமான கட்டடத்தில் ஏற்பட்ட அந்தத் தீ அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. கட்டாரில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான குடியேற்றத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் தெற்கு ஆசிய பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலையில் மேற்படி தீ அனர்த்தத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.