
சிம்பு கடந்த சில வருடங்களாக பல கஷ்டங்களை கடந்துவிட்டார். வாலு படம் வருவதற்கு கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.ஒரு வழியாக அந்த படம் வெளிவந்தாலும் பெரிய வெற்றியை அவருக்கு தரவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் இது நம்ம ஆளு படம் வெளிவந்தது.இப்படம் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இவருக்கு விட்ட இடத்தை திரும்ப பெற்று தந்தது. இதனால், ‘இந்த நாளுக்காக தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி’ என உருக்கமாக கூறியுள்ளார்.





