நீர்கொழும்பு வை.எம்.சி.ஏ யின்(YMCA) அனுசரனையுடன் வவுனியா வை.எம்.சி.ஏ யில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான நிகழ்வு வவுனியா வை.எம்.சி.ஏ யின் தலைவர் திரு பாரதி ஆனந்தம் தலைமையில் நேற்று (03.06.2016) வவுனியா வை.எம்.சி.ஏ யில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் (YMCA of Hong Kong Polytechnic University Team) கொங் கொங் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன் இணைந்து வவுனியா வை.எம்.சி.ஏ யின் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் வை.எம்.சி.ஏ யின் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மிகவும் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் பங்குகொண்டு பயனடைந்தார்கள்.























