பிரான்ஸில் வரலாறு காணாத வௌ்ளம் : 20,000 பேர் வரையில் இடம்பெயர்வு!!

649

13

பிரான்ஸில் கடந்த 30 வருடங்களில் இல்லாத வகையில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

பாரிஸ் நகரின் செயின் ஆற்றின் நீர்மட்டம் அதன் சாதாரண நீர்மட்டத்தைக் காட்டிலும் 6 மீட்டர் வரை உயர்வடைந்துள்ளதுடன் இந்த நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

மத்திய ஐரோப்பாவில் நிலவும் மழையுடனான வானிலையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸில் இருவரும், ஜெர்மனியின் தென் பகுதியில் 10 பேரும் சீரற்ற வானிலையால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பாரிஸின் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 20,000 பேர் இருப்பிடங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை ஏற்பட்ட சேதங்களின் மதிப்பீடு 600 மில்லியன் யூரோவையும் கடந்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

மேலும், பாரிஸிலுள்ள உலக பிரசித்திபெற்ற இரண்டு அருங்காட்சியங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்குள்ள விலைமதிப்பற்ற கலைப்படைப்புக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

சீரற்ற வானிலையால் பெல்ஜியம்,போலந்து ஆகிய நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

Boats are lined up on the flooded Loing Canal in St Mammes, where the Loing joins the Seine south of Paris, France, Thursday June 2, 2016. Floods inundating parts of France and Germany have left five people dead and thousands trapped in homes or cars, as rivers have broken their banks from Paris to Bavaria.(AP Photo/Jerome Delay)

14 15