வவுனியா தோணிக்கல் லக்க்ஷபான வீதியில் இன்று மதியம் 12.30 மணியளவில் நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் 38 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 18 வயது மதிக்கத்தக்க இளைஞனும் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
-கோபி-











