கொஸ்கம இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலையில் திடீரென தீப் பரவல் : மக்கள் இடம்பெயர்வு!!

651

Fire

கொஸ்கம-சாலாவ இராணுவ முகாமில் திடீர் தீப்பரவல் சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீயுடன் பாரிய வெடிப்பு சத்தமும் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அவிசாவளை – கொழும்பு பிரதான பாதை, கொஸ்கம பிரதேசத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன் தீ சம்பவத்தை பார்வையிட குறித்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.