வவுனியா-யாழ்ப்பாணம் பேரூந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் : ஓட்டுனர் படுகாயம்!!(படங்கள், காணொளி)

1085

 
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து மீது கைதடி தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்று இரவு 9 மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிலில் பேரூந்தை பின்தொடர்ந்து வந்த இனம்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இக் கல்வீச்சுத் தாக்குதலில் பேரூந்தின் ஓட்டுனர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பயணிகள் சிலருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கைதடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-விஜி-

13349191_1107259925986682_1553039101_n 13382302_1107260102653331_1939654101_n 13393101_1107290259316982_2070863839_n 13393521_1107260325986642_2067411962_n 13400965_1107260265986648_1983884999_n 13401491_1107259559320052_662379054_n