இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொன்றவருக்கு மரண தண்டனை!!

553

hang

சவுதி அரேபியாவில் மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கொலை கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனை அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் 58 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாசி அல்-கைபாரி என்பவர் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து, எரித்து கொலை செய்துள்ளார்.

இந்த குற்றத்துக்காக மதினா நகரில், அவரது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.