நடிப்பை நம்பி படிப்பை கைவிட்ட தன்ஷிகா!!

422

Dansika

ஜெகன்நாதனின் பேராண்மை, பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் அரவான் படங்கள் மூலம் தமிழ் திரை உலகில் பேசப்படும் நடிகை ஆனவர் தன்ஷிகா. தற்போது ரஜினியின் கபாலியில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தனது சினிமா வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொட்டு இருக்கின்றார்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் அக்காவின் மகன் அவிஷேக் கதாநாயகனாக நடிக்கும் காத்தாடி படத்தில் தன்ஷிகா அவரது ஜோடியாகி வருகின்றார். எஸ்.கல்யாண் இயக்கியுள்ள இப் படத்துக்கு பவன்–தீபன் இசை அமைத்திருக்கிறார்கள். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய தன்ஷிகா…

நான் நடிப்பை மிகவும் நேசிக்கின்றேன். சின்ன வயதிலேயே நடிப்பை நம்பி படிப்பை கைவிட்டேன். படிக்க முடியாவிட்டாலும் இனி எல்லாமே நடிப்புதான் என்று இருந்தேன். ஆரம்ப காலத்தில் எத்தனையோ பிரச்சினைகளை, சிரமங்களை சந்தித்தேன். அவற்றில் இருந்து என்னை காப்பாற்றி வழி நடத்தியது என் தந்தையும், எனது மாமா ஒருவரும்தான்.

நான் எப்போதும் எதையாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன். படப்பிடிப்பு இல்லாத காலங்களில் பல விடயங்களை கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றேன். இது மட்டுமல்ல ஜிம்னாஸ்டிக்கும் கற்றேன். இலக்கு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த எனக்கு நல்ல படங்கள் அமைந்தன.

பெரிய இயக்குனர்கள், பெரியபடங்கள் என்று பயணித்து இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.