நகைக்கடையில் 10 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த குரங்கு!!(வீடியோ)

433

Monkey

குரங்கு ஒன்று பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

நகைக்கடையில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ள காட்சியில்,குண்டூரில் உள்ள நகைக் கடை ஒன்றின் கண்ணாடி கதவை மெதுவாக திறக்கும் குரங்கு பின்னர், அங்குள்ள காசாளர் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்கிறது.

சிறிது நேரத்தில் அங்கிருந்த மேசையை மெதுவாக திறந்து அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணக்கட்டு ஒன்றை கட்டை எடுத்துக்கொண்டு தாவிக்குதித்து வெளியே ஓடிவிடுகிறது.

இதனைக் கண்ட கடை ஊழியர், அந்தக் குரங்கை துரத்திச் சென்று பணத்தை வெற்றிகரமாக மீட்டுள்ளார்.