யாழ் கடற்பகுதி பாறைகளுக்குள் இருந்து பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு!!

562

Kanja

காங்கேசன்துறை கடற்பகுதியில் பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 158 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக, காங்கேசன்துறை பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடற்பகுதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், பாறைகளுக்கு நடுவில் பொதிகள் இருப்பதை அவதானித்து அருகில் சென்று பார்த்த போது, அவற்றில் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது.

மேலும், இவை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட நிலையில், பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.