
கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் ஆம்புலன்சில் படுத்தபடியே தனது காதலனை திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பி.ஜி.கெரே என்ற கிராமத்தை சேர்ந்த பெண் நேத்ராவதி.வைத்திய தாதி மாணவியான இவர் குருசாமி என்பவரை காதலித்து வந்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர், அதன்படி அமாவாசை அன்று சித்ரதுர்காவில் உள்ள மண்டபத்தில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.இந்நிலையில் நேத்ராவதி தனது காதலருடன் சித்ரதுர்காகோட்டையை சுற்றிப்பார்க்க சென்ற போது கால் தவறி கீழே விழுந்தார்.இதில் அவர் முதுகெலும்பு பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் 5ம் திகதி நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் தானும் கலந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.உடனே இதற்கு சம்மதம் தெரிவித்த நிர்வாகம் ஆம்புலன்சில் நேத்ராவதியை சித்ரதுர்காவுக்கு அனுப்பி வைத்தனர்.ஆம்புலன்ஸில் படுத்தபடியேஅவரது காதலரான குருசாமி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.





