ஆண்களோடு கிரிக்கெட் விளையாடி வரலாறு படைத்த பெண்..!!

346

கிரிக்கெட் லீக் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை, ஆண் வீரர்களுடன் இணைந்து விளையாடி புதிய வரலாறு படைத்துள்ளார்.

அவரது பெயர் கோலே வால்வெக். 20 வயதான இவர் போல்டன் அசோசியேஷன் லீக் போட்டியில் கலந்து கொண்டு வால்ஷா அணி சார்பாக விளையாடினார்.

england-cricket1

இந்த அணி கோல்பேன் அணிக்கு எதிரான போட்டியில் மோதியது. வால்ஷா அணியில் சக வீரர்கள் அனைவரும் ஆண்களே. கோலே மட்டும்தான் பெண் ஆவார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆண்களோடு இணைந்து ஆடிய முதல் பெண் என்ற பெருமை கோலேவுக்குக் கிடைத்தது.

போல்டன் அசோசியேஷன் லீக் 125 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாகும். இந்த வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் ஆண்களுடன் இணைந்து ஆடியது இதுவே முதல் முறையாகும்.

பந்து வீச்சாளரான கோலே 11 ஓவர்கள் பந்துகளை வீசி 4 விக்கெட்களையும் பறித்து சாதனை படைத்தார். இதன் மூலம் தனது அணிக்கும்அவர் வெற்றி தேடித் தந்தார்.

வெற்றிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” நான் ஆட வந்தபோது அனைவரும் என்னைப் பார்த்து சிரித்தனர். ஆனால் எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். அணியில் நான் மட்டுமே பெண்ணாக இருந்ததை நான் கவலைப்படவில்லை” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ” நான் பந்து வீச முயன்றபோது என்னை அவர்கள் கேலி செய்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தவில்லை” என்றார். கோலே, தனது 8 வயது முதலே வால்ஷா அணிக்காக ஆடி வருபவர் ஆவார். மேலும் அவர் கால்பந்திலும் விளையாடுகிறார்.