பேஸ்புக்கில் 2 கோடி ஏமாற்றிய கில்லாடி!!

745

1110552824US-soldier2

சமூக வலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகள் தொடங்கிய காலத்தில் பொதுமக்கள் இதை தகவல் தொடர்பை பரிமாற்றிக்கொள்ளுவதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். இதன்மூலம் அறிமுகம் இல்லாதவர்கள் கூட நண்பர்கள் ஆகும் நிலைக்கு சமூக வலைத்தளங்கள் உதவியது.

பின்னர், சமூக வலைத்தளங்களை பல்வேறு விரோத செயல்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்கள். குறிப்பாக போலியான ஐடிகளை உருவாக்கி எதிரில் இருப்பர்களிடம் நண்பர்கள் என்று கூறி காதலித்து கைவிடுவதில் இருந்து தொழில் தொடங்க பணம் கேட்டு முறைகேடு செய்வது நடைபெற்று வருகிறது.

இப்படித்தான் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த வருடம் மர்ம நபர் ஒருவர் 1.18 கோடி ரூபாய் ஏமாற்றி ஏப்பம் விட்டார். தற்போது ஒருவர் 1.97 கோடி ரூபாயை கோட்டைவிட்டு ஏமாந்து நிற்கிறார்.

மேற்கு மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் குவாலேவாலா (வயது 72) நாஷிக்கில் ஆட்டோமொபைல் உதிரிப்பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். இவர் பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துள்ளார். இவர் ஒருநாள் பேஸ்புக்கில் நண்பர்களை தேடும்போது ரயோன் ஜான் (பெயர் மாற்றம்) என்பவர் அறிமுகமானார். இருவரும் நீண்ட நாட்கள் பேஸ்புக் மூலம் பேசியபின் நண்பர்கள் ஆனார்கள்.

அப்போது ரயோன் ஜான், தான் அமெரிக்க ராணுவத்தில் வேலைப் பார்ப்பதாகவும், தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைப்பிரிவில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜான், சில நாட்களுக்குப்பிறகு நான் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்காக முதலீடு செய்ய விரும்பினேன். ஆனால் நம்பிக்கையான நபர் யாரும் கிடைக்கவில்லை. நீங்கள் என்னுடன் பிசினஸ் பார்ட்னராக விரும்பினால், 5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 3.32 கோடி ரூபாய்) மதிப்பில் முதலீடு செய்ய இருக்கிறேன் என்று கூறினார். இதற்கு குவாலேவாலா சம்மதம் தெரிவித்தார்.

மேலும், ஜான் அனைத்து வகை சான்றிதழ்களையும் பொய்யாக தயாரித்து குவாலேவாலா நம்பும் வகையில் அனுப்பி வைத்தார். அத்துடன் வங்கி நிர்வாகி ஒருவரும் ஜான் தொடர்பாக பேசினார். இதனால் உறுதியாக நம்பிய குவாலேவாலா, பல்வேறு வங்கிகளில் அக்கவுண்ட் தொடங்கி பணம் டெபாசிட் செய்தார். அந்த அக்கவுண்ட் அனைத்திலிருந்தும் ஜான் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற வகையில் தொடங்கப்பட்டிருந்தது.

சில நாட்கள் கழித்து குவாலேவாலா ஏடிஎம் சென்டரில் சென்று பணம் எடுக்க முயன்றார். அப்போது அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது. அதே சமயத்தில் ஜான் குவாலேவாலாவுடன் வைத்திருந்த அனைத்து தொடர்பையும் துண்டித்தார். அப்போதுதான் தான் ஏமாற்றம் செய்யப்பட்டுள்ளதா குவாலேவாலா உணர்ந்தார். உடனடியாக அவர் போலீசில் புகார் அளித்தார். இந்தியாவில் குவாலேவாலாதான் முதன்முறையாக அதிக பணமாக சுமார் 2 கோடி ரூபாய் சமூக வலைத்தளம் மூலமா இழந்துள்ளார்.