வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரிய மாநாடு -2016(படங்கள்)

1146

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு நேற்றும் (10.06.2016),நேற்று முன்தினமும்(09.06.2016)இரண்டு நாட்கள் வெகு  சிறப்பாக இடம்பெற்றது.கல்விப் பணிப்பாளர் திரு .வைரமுத்து  ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில், கனகராயன்குளம் மகாவித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாம் நாள் நிகழ்வில்

 வவுனியா தெற்கு வலயகல்விப் பணிப்பாளர் திருமதி. அன்டன் சோமராஜா பிரதம விருந்தினராகவும்   ஓய்வு பெற்ற   வவுனியா  வடக்கு வலயத்தின் முன்னாள் பணிப்பாளர் திரு.ஆ.பொன்னையா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் பங்குபற்றியிருந்தனர்.மேலும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி  மு. சிதம்பரநாதன் அவர்கள்  நவீன கற்பித்தல் நுட்பங்கள் என்னும் தலைப்பில்  ஆசிரிய மாநாட்டின் போது பேருரை ஆற்றினார் .

ஆய்வறிக்கைகள் மற்றும் அரங்க செயற்பாடுகளை வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர்கள் வழங்கியிருந்தனர்.

 நேற்று இடம்பெற்ற இரண்டாம் நாள் நிகழ்வின் போது

வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம அதிதியாகவும்  முன்னாள்  வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர்  திரு .த .மேகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும்  வட மாகாணசபை உறுப்பிர்களான ஜி.ரி. லிங்கநாதன், ஆர். இந்திரராஜா  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

   தற்போதைய கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும்  முன்னாள் வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளருமானசி .  தண்டாயுதபாணி  அவர்கள்  கலந்து கொண்டு  இன்றைய ஆசிரியர் என்ற தலைப்பின் கீழ் பேருரையாற்றியிருந்தார்.

மேலும்    ஆசிரியோதயம் என்னும்   ஆசிரிய மாநாட்டு மலர்  வெளியீடும்   வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கல்வியியலாளர்ககளை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

  வவுனியா வடக்கு வலயத்துக்குட்பட்ட   பிரதிகல்விப் பணிப்பாளர்கள் உதவி கல்விப்பணிப்பளர்கள் உட்பட நெடுங்கேணி ஓமந்தை கோட்ட கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள்  மற்றும் கல்வித்துறையை   சார்ந்த பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.

13269253_1769716003264408_8704613029477993855_n 13269265_1067295456670441_9010092375760872653_n 13315753_642008749285427_5064378071408301926_n 13335864_1067296736670313_8213044220657484926_n 13339444_1769717546597587_587282816167374113_n 13339603_641437079342594_312162722310971272_n 13343009_1067296853336968_6978837433679305890_n 13346526_1067294883337165_959492239480133776_n 13346546_642008649285437_5698777673745785329_n 13346996_1067295090003811_6908144029671715548_n 13393927_642490962570539_5790584704947609085_n 13394094_1067296663336987_8329757021761202134_n 13406761_681533641994609_58973134378405994_n 13406790_1769717859930889_4082455938447104405_n 13407080_1067297036670283_114982009206788044_n 13407324_1067297076670279_6133899311651510853_n 13413045_681534031994570_3723485405857211321_n 13413096_1067295586670428_4308187213347072886_n 13413578_642492842570351_2217194211308104053_n 13413638_1769716146597727_8843779961679238704_n 13413723_1769717109930964_5286182533154543494_n 13417472_1067297006670286_6285683170984195290_n 13417497_1067295730003747_1561846153194188779_n 13417527_1769718003264208_8192760424635913465_n 13418717_1769717266597615_2518306549642828681_n 13418804_1067296413337012_8453879144653861197_n 13423804_641437156009253_7602623305627125077_n 13423897_1067296310003689_399283199152308299_n 13427785_1067295156670471_1611038639681498232_n 13427970_642008695952099_1216976544463716288_n 13428015_1067295000003820_3470732736252333463_n 13428388_1769716853264323_3416244685995681095_n 13428410_1769717006597641_3910225106587260114_n 13428599_681617351986238_4234733041879971764_n 13432187_642506819235620_6173544613178601264_n 13432206_1769717403264268_3648441568623181027_n 13432390_681534128661227_3053076294741222292_n 13432424_1067296043337049_3173886500093612783_n