இலங்கை அகதிகள் 40 பேர் இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் அநாதரவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் பயணித்த படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்கு உள்ளானதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்ததாக ஆச்சே மாநிலத்தின் லோக்னா மாவட்ட இராணுவ பிரதான அதிகாரி மேஜர் தருல் அமீன் தெரிவித்துள்ளார்.
டி.என்.1எப்.வீ-00455.09 என்ற இலக்கத்தை கொண்ட இந்த படகு, 17 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமும் கொண்டது என அவர் கூறியுள்ளார்.
படகில் வந்தவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அகதிகளில் பெண்களும் சிறுவர்களும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






