வித்தியாசமான முறையில் மாணவிக்கு தண்டனை வழங்கிய ஆசிரியை சிக்கலில்!!

558

Punishment

தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவிக்கு ஆசிரியை ஒருவர் புதுவிதமான தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை வலயக் கல்வி பணிப்பாளர் டபிள்யூ.எம்.ஐ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

சக மாணவி மீது பேனையால் கீறியமைக்கு தண்டனையாக மற்றைய மாணவர்களைக் கொண்டு “நான் முட்டாள்” என பேனையால் குறித்த மாணவியின் உடலில் எழுதியதாக இந்த ஆசிரியை மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் தன்னுடைய தொலைபேசி மூலமாக முறைப்பாடு ஒன்று தெரிவிக்கப்பட்டதாக டபிள்யூ.எம்.ஐ.ஹேரத் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக தம்புள்ளை வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.