அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்க நிர்ப்பந்திக்கின்றனர்: நடிகை ஆனந்தி புகார்!!

429

Anandi

அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்கும்படி நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறுவதாக படக்குழுவினரை மிரட்டினேன் என்று நடிகை ஆனந்தி கூறினார்.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கி உள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை ஆனந்தி அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்..

பாடசாலையில் படித்துக்கொண்டு இருந்தபோது நடிகையாக வேண்டும் என்று ஆர்வம் இல்லை. எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். கயல் படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் என்னை நடிக்க வைத்து பிரபலபடுத்தினார். அவர்தான் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். திரிஷா இல்லன்னா நயன்தாரா, பொறியாளன், சண்டி வீரன் உள்பட பல படங்களில் நடித்து விட்டேன். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறேன்.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் தாதாவின் மகளாக வருகிறேன். இந்த படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் எனக்கு சிபாரிசு செய்தார் என்பதில் உண்மை இல்லை. நல்ல கதாபாத்திரம் இந்த படத்தில் எனக்கு அமைந்து இருக்கிறது. படப்பிடிப்பில் என்னிடம் எல்லோரும் அன்பாக பழகினார்கள். அக்கறையோடு பார்த்துக்கொண்டனர்.

ஏற்கனவே நான் நடித்த சில படங்களில் எனக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டன. இயக்குனர்கள் ஆரம்பத்தில் என்னிடம் கதை சொன்னதை மீறி படப்பிடிப்பில் கவர்ச்சியாக நடிக்கும்படி வற்புறுத்தப்பட்டேன். அரைகுறை ஆடையை கொடுத்தும் அணியச் சொன்னார்கள். என் உடல் அமைப்பிற்கு கவர்ச்சி எடுபடாது. கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சினிமாவில் அறிமுகமானபோதே முடிவும் செய்து விட்டேன்.

எனவே கவர்ச்சியான ஆடைகளை அணியமாட்டேன் என்று மறுத்து விட்டேன். மீறி என்னை வற்புறுத்தினால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விடுவேன் என்றும் மிரட்டினேன். இப்போதெல்லாம் கதை கேட்கும்போதே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குட்டைப்பாவாடை அணிய மாட்டேன் என்றெல்லாம் இயக்குனரிடம் உறுதியாக சொல்லி விட்டுத்தான் நடிக்க செல்கிறேன் என்று ஆனந்தி தெரிவித்தார்.