வானவில் நிறத்தில் ஔியூட்டப்பட்ட ஈபில் கோபுரம் : காரணம் தெரியுமா?

632

Efil tower

அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இரவு விடுதியில் நேற்று (13.06) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபில் டவர் மற்றும் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தகக் கட்டிடம் போன்ற உலகின் தலைசிறந்த அடையாள சின்னங்கள், ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியான வானவில்லின் நிறத்தில் ஔியூட்டப்பட்டன.

ஓர்லந்தோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர்களின் இரவு விடுதியில் 29 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் வரையில் உயிரிழந்தனர் மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய ஒமர் மட்டீன் என்ற இளைஞர் பொலிஸார் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்க வரலாற்றின் கருப்புப் பக்கமாக அமைந்துபோன இந்த கொடூர தாக்குதலால் துயருற்றுள்ள அமெரிக்க மக்களுக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில் பாரிஸ் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபில் கோபுரமும், பாரிஸ் நகர மேயர் அலுவலகமான சிட்டி ஹால் கட்டிடமும் அமெரிக்காவின் தேசிய கொடியில் காணப்படும் நிறங்கள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியான வானவில்லின் நிறத்தில் ஒளியூட்டப்பட்டன.

மேலும், அங்கு கூடிய ஏராளமான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி ஒர்லந்தோ இரவு விடுதியில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை மேற்கொண்டனர்.