வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் முன்னாள் உபபீடாதிபதி த.ம.தேவேந்திரன், வ.தே.க.கல்லூரியின் விரிவுரையாளர் திரு.அ.யூ.ததேயு பீரிஸ் ஆகியோர் இணைந்து எழுதிய ‘14 விளையாட்டுக்களும், மெய்வல்லுநர் நிகழ்ச்சி அளவீடுகளும்’ எனும் நூல் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் உடற்கல்வி மன்றத்தினால் நேற்று முன்தினம் (13.06.2016) வெளியிட்டு வைக்கப்பட்டது.
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி திரு.கு.சிதம்பரநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களின் பிரதிநிதிகள், அமைச்சர் றிசாட் அவர்களினதும் கைத்தொழில் வர்த்தக அமைச்சினதும் இணைப்புச் செயலாளர் முத்து முஹமது, இவர்களுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை செயலாளர் திருமதி கிசோர் சுகந்தி, வவுனியா தெற்கு கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) ஏ.எம்.சுபைர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நூல் ஆசிரியர்கள் அறிமுகத்தை வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.எம்.பவானந்தன் செய்து வைத்தார். நூல் அறிமுகத்தையும் ஆய்வையும் அருட்பணி அன்புராசா (அ.ம.தி) நிகழ்த்தினார்.