இலங்கையில் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் : மக்களே அவதானம்!!

1014

Weather alert Srilanka

இலங்கையில் கடலோர பிரதேசங்களில் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்திலும்,மேலும் புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்திலும் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.