மழை வருவதை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்க கடலுக்கு அடியில் ரோபோட்டுகளை அமைக்கும் பணிகளை இந்திய – இங்கிலாந்து விஞ்ஞானிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
தற்போது அளவுக்கு அதிகமான பருவ மழை பெய்து வருவதால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கடலில் ஏற்படும் புயல், காற்றழுத்த தாழ்வு நிலையை கணித்து மழை பெய்யும் தன்மையை கண்டறிய வங்க கடலுக்கு அடியில் ரோபோட்டுகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்பணியை வங்காள விரிகுடா படுகை ஆய்வக விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர். இவர்களுடன் இங்கிலாந்தை சேர்ந்த கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் சவுத் ஆம்டனில் உள்ள தேசிய கடல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளும் இணைந்துள்ளனர்.