காலி, கரந்தெனிய-தெமட்டாகஸ் கந்த பிரதேசத்தில் மருமகளால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வயோதிபப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (15.06.2016) மாலை இடம்பெற்றுள்ளது.
68 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நீண்ட காலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்தும் சேவை செய்ய முடியாத காரணத்தினாலேயே மருமகள் கொலை செய்ததாக ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.






