வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் விஜயம்!!

665

 
வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று (16.06.2016) காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன் வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கத்திற்கு நிரந்தர காணியினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கத்துடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அத்துடன் வர்த்தகர் சங்கத் தலைவர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு ஒன்றையும் கையளித்ததுடன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னத்தையும் வழங்கி வைத்தார்.

இன்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வர்த்தக சங்கத்திற்கு நிரந்தர காணி பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள கலந்துரையாடப்பட உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முதல் முறையாக மேற்கொண்ட விஜயம் என்பதுடன் வர்த்தக சங்கத்தின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார் என்று வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வர்த்தக சங்க நிர்வாக சபை உறுப்பினர் ஆ.அம்பிகைபாகன், வர்த்தக சங்க முகாமையாளர் பா.விக்டர் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1324