
வருடத்தின் இதுவரையான காலத்தில் 12 சிறுத்தைகள் மனித செயற்பாடுகளினால் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, சிறுத்தைகள் கொல்லப்படுவதை தடுப்பதற்காக உடனடி மீட்பு படையணி ஒன்றை நியமித்துள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் சிறுத்தைகளை பிடிப்பதற்காக விரிக்கப்பட்டுள்ள வலைகளை அகற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.சிறுத்தையொன்று வலையில் சிக்கினால், மிகவிரைவில் அந்த இடத்திற்கு சென்று சிறுத்தையை மீட்கும் உரிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.





