இலங்கையில் 2016 காலாண்டில் 5.5 வீதம் பொருளாதார வளர்ச்சி!

409

growth

2016ம் ஆண்டின் காலாண்டில் இலங்கையில் பொருளாதார 5.5 வீதமாக அபிவிருத்தியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.2015ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தினுள் காணப்பட்ட 19,786,09 மில்லியன்மொத்த தேசிய உற்பத்தியானது, 2016ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தினுள் 20,880,24 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

இக்காலப்பகுதியினுள் முழு தொழில் மற்றும் பொருளாதார சேவைகள் நடவடிக்கைகள் முறையே 8.3 மற்றும் 4.9 ஆக விருத்தி வேகத்தை காட்டுவதுடன், கிராமிய தொழில் பொருளாதார நடவடிக்கைகளில் 1.9வீத சிறிய வளர்ச்சி வேகமும் பதிவாகியுள்ளது.எனினும் கிராமியத் தொழில் பொருளாதார நடவடிக்கைகளில் மரக்கறி, தேங்காய்,பழவகைகள் மொத்த மற்றும் சில்லறை அளவிலான உற்பத்திகள் முறையே 16.3, 10, 5.1 வீதங்களாக வளர்ச்சி வேகத்தை காட்டுகின்றன.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் 2016 ஆம் ஆண்டின்முதல் காலாண்டுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கு மதிப்பீடுகளின் படி அக்காலத்தினுள் தொழில் துறைகளில் மொத்த தேசிய உற்பத்திக்கு கிடைத்துள்ள பங்களிப்பான 31.6 வீதம் வரலாறு காணாத வளர்ச்சியொன்றை கண்டுள்ளது.

இதற்காக அதி கூடிய பங்களிப்பு நிர்மாணக் கைத்தொழில் துறையில் இருந்தே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அது 2015ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தைவிட 2016ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் 12வீத குறிப்பிடத்தக்க வளர்ச்சி வேகத்தை காட்டுகின்றன.2016ம் ஆண்டு முதல் காலாண்டு காலப்பிரிவில் நிதி மற்றும் இடை நிதிச் சேவை நடவடிக்கைகளுக்காக 15.9வீதமாகவும், சில்லறை மற்றும் மொத்த வியாபார நடவடிக்கைகள் 5.7 வீதமாகவும், கல்வி சேவை நடவடிக்கைகள் 5.9 வீதமாகவும், பிறதனியார் சேவைகள் 6.7 வீதமாகவும் வளர்ச்சி வேகத்தை காட்டுகின்றது.