இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, சிங்கங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திருமணமான இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி ரீவா சோலங்கியுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்குள்ள சிங்கங்கள் சரணாலயத்தை வாகனத்தில் சென்று சுற்றிப் பார்த்தபோது, அவரும், அவரது மனைவியும் வாகனத்தில் இருந்து இறங்கி புகைப்படம் எடுத்துள்ளனர்.
மேலும் ஜடேஜா சுமார் 12 அடி பின்னணியில் சிங்கத்துடன் நிற்கும் வகையிலும் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
கிர் காடுகளில் சிங்கங்கள் வசிக்கும் பகுதிகளில் வாகனத்தில் இருந்து இறங்கக் கூடாது என விதி இருக்கும் போது, ரவீந்திர ஜடேஜா சிங்கங்களுடன் புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வன சட்டங்களை ஜடேஜா மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது தொடர்பாக விசாரணை நடத்த வனத்துறை உத்தரவிட்டுள்ளது.






