
அரவிந்த் சாமி தமிழக பெண்கள் பலரும் விரும்பும் பெயர். 90களில் பல பெண்களின் கனவு காதலன், இப்படி தாண்டி எனக்கு ஒரு கணவன் வேண்டும் என்று பெண்கள் ஏங்கிய தருணம். ரோஜாவில் மென்மையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.இயக்குனர் மணிரத்னம் தளபதி படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் இவரை அறிமுகப்படுத்தினார்.இந்த கதாபாத்திரம் எந்த அளவிற்கு பவர்புல் என்றால், ரஜினி, மம்முட்டி போன்ற சூப்பர் ஸ்டாரையே எதிர்த்து நிற்கும் கதாபாத்திரம், அந்த படத்தில் மிகப்பெரும் ஜாம்பவான்களை தாண்டி அனைவரையும் கவர்ந்தார்.
இந்த படத்தில் நடித்த போது ஒரு நாள் தன் படப்பிடிப்பு முடிந்து ஓர் அறையில் சென்று தூங்கி விட்டாராம், அவர் படுத்திருந்து கட்டில் கீழ் ஒருவர் படுத்திருந்தாராம், சில நேரம் கழித்து தான் தெரிந்தது அது சூப்பர் ஸ்டார் உறங்கும் கட்டில், அவர் தான் தரையில் படுத்திருக்கிறார் என்று, இதை பல இடங்களில் அரவிந்த் சாமி கூறியுள்ளார்.இதை தொடர்ந்து ரோஜா தமிழ் சினிமாவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, வட இந்தியா நாயகன் போல் இருந்ததால் என்னவோ இந்த படம் பாலிவுட்டிலும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பம்பாயிலும் நடித்தார், மாஸ் ரசிகர்கள் என்று இல்லாமல் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை கொண்டு பயணித்து வந்த அரவிந்த் சாமி திடிரென்று சினிமாவை விட்டு முழுவதும் விலகினார்.
குடும்பம் வியாபாரம் என பிஸியாக இருந்த அரவிந்த் சாமி மீண்டும் தன் குருநாதர் மணிரத்னத்திற்காக கடல் படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார், ஆனால், இவை தோல்வியில் முடிய, தனி ஒருவனாக நானே வெற்றி பெறுகிறேன் என தனி ஒருவனில் மிரட்டியிருந்தார். பிறகு என்ன தற்போது அரவிந்த் சாமி மீண்டும் முன்பை விட அதிக பலத்துடன் தமிழ் சினிமாவில் கால் பதித்துவிட்டார். இவர் இன்று போல் என்றும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்று இன்று பிறந்தநாள் கொண்டாடும் அரவிந்த் சாமி அவர்களுக்கு வவுனியா நெற் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.





