கான்ஜூரிங்-2 படத்தை பார்த்து உயிரிழந்த நபரின் உடலைக் காணவில்லை : அதிர்ச்சியில் பொலிஸ்!!

1357

Conjuring2

கான்ஜூரிங்-2 திரைப்படத்தை பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தவரின் உடலை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாலசுப்ரமணியன் திரையரங்கில் கான்ஜூரிங்-2 படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 17 ஆம் திகதி, படம் பார்த்த 60 வயது முதியவர் மாரடைப்பால் சுருண்டு விழுந்துள்ளார்.

திரையரங்கில் படம் பார்த்தவர்கள் அளித்த தகவலின் பேரில் 108 அவசரஊர்தி மூலம் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் உடன்வந்தவர்கள் உடலை ஆட்டோவில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு இம்முதியவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, இவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால், கொண்டு செல்லும் வழியில் இறந்துபோன இந்நபரின் உடலை காணவில்லை என பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், இந்நபர் தங்கியிருந்த திருவண்ணாமலை ரமணா ஆசிரமம் எதிரே விசிறி சாமியார் மடத்தில் உள்ள அறை மற்றும் இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.