472 மகள்களிடமிருந்து தந்தையர் தினம் வாழ்த்து பெற்ற பெருமைக்குரிய மாமனிதர்!!

613

sawani

அகமதாபாத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் சவானி என்னும் நபர், அவரது 472 திருமணமான மகள்களிடமிருந்து வாழ்த்துக்கள் பெற்றுள்ள சம்பவம் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெண்கள் அனைவரும் அவர்களின் உண்மையான தந்தை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சவானி, அவர்களுக்கு தகப்பனாக இருந்ததுடன், கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் திருமணங்களை முன்நின்று நடத்தி வருகிறார்.

47 வயதான சவானி தனது சகோதரர் பத்து ஆண்டுகளுக்கு முன் இறந்த பிறகு, அவரது இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்ய வேண்டிருந்தது. இந்த நிகழ்வு அவரை தந்தை இழந்த பெண்கள் குறித்த சிந்திக்க வைத்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் தந்தையை இழந்த பெண்களுக்கு ஆதரவு தந்து, அவர்களின் திருமணங்களுகளை முன்நின்று நடத்தி வருகிறார் சவானி.

ரியால்டி, வைரம்,மற்றும் பள்ளிகள் ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபரான சவானி, எந்த மதத்தையும்,சாதியையும் சார்ந்தவர் அல்ல.

கடந்த 2016ம் ஆண்டு மட்டும், 216 பெண்களுக்கு அவர் திருமணம் செய்துவைத்துள்ளார்.

இதுகுறித்து சவானி கூறுகையில், கணவனை இழந்த ஒரு தாய் தனது மகளுக்கு திருமணம் செய்ய கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அவரின் மகள்களில் ஒருவர் கூறியதாவது, சவானி அப்பா ஒரு தந்தையை விட சிறந்தவர், உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இவரை போன்றே ஒரு தந்தை கிடக்க வேண்டும் என வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.