தங்கையின் இழப்பைத் தாங்க முடியாமல் தீயில் குதித்த அண்ணன்!!

336

MISAWA AIR BASE, Japan-- A fire fighter from the 35th Civil Engineering Squadron works to put out a blaze on an aircraft fire trainer during fire prevention week here on Oct. 9, 2007. The 35th Civil Engineering Squadron annually demonstrates fire fighting procedures for Misawa residents. (U.S. Air Force photo by Senior Airman Laura R. McFarlane)(RELEASED)

விழுப்புரம் மாவட்டத்தில் தங்கை இறந்த சோகம் தாங்கிகொள்ள முடியாமல் அண்ணன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெங்கராம்பாளையத்தை சேர்ந்த குமார்(26) மற்றும் குமாரி ஆகிய இருவரும் உடன்பிறந்தவர்கள் ஆவார். தனது தங்கை குமாரி மீது குமார் அதிக அன்பு கொண்டவர்

குமாரிக்கு திருமணம் ஆகி தனது கணவருடன் தனியாக வசித்து வந்துள்ளார், இந்நிலையில் குமாரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, இதை அறிந்த குமார், அவரை பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குமாரி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுபற்றி அறிந்ததும் தனது குடும்பத்தினருடன் நல்லூர் பாளையத்துக்கு வந்த குமார், தங்கையின் உடலை பார்த்து கதறி அழுதார்.

குமாரியின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன. குமாரியின் உடலை வீட்டில் இருந்து மயானத்திற்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். குமார் அழுதபடியே உடன் நடந்து சென்றார். மயானத்தில் குமாரியின் உடலை தகனம் செய்தனர்.

அப்போது துக்கம் தாங்காமல் குமார் கதறியபடியே, தங்கை குமாரியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் எரிந்த தீயில் குதித்தார். இதனால் அவர் மீது தீப்பற்றி எரிந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த உறவினர்கள், அவரை வெளியே இழுத்தனர். மேலும் அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் குமாரின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கை இறந்த துக்கம் தாங்க முடியாமல், அவரது உடல் தகனம் செய்யப்பட்ட சிதையில் குதித்து அண்ணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.