
கோவை மாவட்டத்தில் 8 வயது மகள் கன்னத்தில் சூடு வைத்த குடிகார தந்தையை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கோவை மாவட்டம், நெகமம் அருகிலுள்ள வலசுபாளையத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்- சுபா தம்பதி. இவர்களுக்கு 8 வயதில் காயத்ரி என்ற மகள் உள்ளார். காயத்ரி அரசுப் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கூலித்தொழிலாளியான கோவிந்தராஜ், குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீட்டில், ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த தனது மகள் காயத்ரியை எழுப்பியுள்ளார். ஆனால் காயத்ரி எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் மகளின் இரு கன்னங்களிலும் சூடு வைத்துள்ளார்.
இதனால் காயத்ரிக்கு பலத்த தீ காயம் ஏற்பட, தாய் சுபா அந்த சிறுமியை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.அப்போது மருத்துவமனையில் இருந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் கோவிந்தராஜை அதிரடியாக கைது செய்துள்ளனர்.





