ஓடும் வண்டியின் சக்கரத்திற்குள் சிக்கிய குழந்தையின் உடல்: சலனமின்றி நின்ற பெற்றோர்!!

564

Shocking Video of a Child Stuck at the Back of the Wheel of a Motorcycle!

சீனாவில் ஓடும் வண்டியின் சக்கரத்திற்குள் காலை விட்ட குழந்தையின் பாதி உடல் சக்கரத்திற்குள் சிக்கியதால் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளது. ஆனால், பெற்றோரோ எவ்வித சலனமும் இன்றி நடந்துகொண்டது, சுற்றியிருந்தவர்களை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது, மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் மிக வேகமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் தனது குழந்தையை வைத்துக்கொண்டு தாய் அமர்ந்திருந்துள்ளார்.

குழந்தையை சரியான முறையில் பிடிக்காத காரணத்தால், குழந்தை கையில் இருந்து தவறி சக்கரத்திற்குள் காலை விட்டுள்ளது, சக்கரம் ஒரு சுழன்று சுழன்றதில் அதன் உடல்பகுதி பாதி சிக்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உதவிக்கு அருகில் இருப்பவர்களை அழைத்துள்ளனர், குழந்தையை காப்பாற்ற 8 பேர் உதவி செய்துள்ளனர், அதில் ஒருவர் பேனர் மற்றும் சில மெக்கானிக் கருவிகளை பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.

சுற்றியிருந்தவர்கள் கூட அச்சத்தில் அலறியுள்ளனர், ஆனால் பெற்றோரோ எவ்வித சத்தத்தையும் எழுப்பாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தனர், குழந்தையை எந்த வேகத்தில் கீழே போட்டார்களோ, அதே வேகத்தில் குழந்தையை வாங்கிகொண்டு, அதன் அழுகையை கூட சமாதானப்படுத்தாமல் சென்றுவிட்டனர். இது சுற்றியிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.