என்னால் அது முடியாது : கோலியின் நெகிழ்ச்சியான டுவிட்!!

436

Virat-Kohli

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவருக்கு 18 வயதாக இருக்கம்போது பெரிய சோகம் நடைபெற்றது.

18 வயதில் டெல்லி அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்கெதிராக டெல்லி அணிக்காக கோலி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரது தந்தை மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி அவருக்குச் சென்றது. இருந்தாலும் அப்பா இறந்த துக்கத்தை மனத்திற்குள் வைத்துக்கொண்டு போட்டியில் தொடர்ந்து விளையாடினார்.

அவரது தந்தை இளம்வயதில் காலமானது விராட் கோலியின் வாழக்கையை அப்படியே மாற்றியது. தந்தை இழந்து விட்டாரே என்று துவண்டு விடாமல் தனது விடா முயற்சியால் தான் எட்ட வேண்டிய சிகரத்தை அடைவதற்கு வீறுநடை போட்டார்.

தற்போது இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் என்ற பெயரோடு மட்டுமல்லாமல் இந்த தலைமுறையின் சிறந்த வீரர் என்ற பெருமையோடு திகழந்து வருகிறார்.

இன்று உலக முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தன்னுடைய தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் கூறும் பாக்கியம் இல்லை என்றாலும், தந்தையுடன் இருக்கும் சிறு வயது போட்டோவை டுவிட்டரில் இணைத்து அனைத்து தந்தையர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

தந்தையுடன் இருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள விராட் கோலி ‘‘எனது தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று எப்படி என்னால் நேரடியாக சொல்ல முடியும். எனக்கு தெரிந்த வலிமையான மனிதர். அனைத்து தந்தையர்களுக்கும் நான் ‘ஹேப்பி பாதர்ஸ் டே’ வாழ்த்துக்கள் கூற விரும்புகிறேன். #pillarsofstrength.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.